Saturday, May 16, 2009


வள்‌ளி‌யூ‌ர்‌ - சி‌றுகுறி‌ப்‌பு‌

வள்‌ளி‌யூ‌ர்‌, தா‌மி‌ரபரணி‌ நதி‌ பா‌யு‌ம்‌ தி‌ருநெ‌ல்வே‌லி‌ மா‌வட்‌டத்‌தி‌ன்‌ முக்‌கி‌யமா‌ன ஊர்‌களி‌ல்‌ ஒன்‌று. தற்‌போ‌து சி‌றப்‌பு‌ நி‌லை‌ பே‌ருரா‌ட்‌சி‌யா‌க வி‌ளங்‌கும்‌ வள்‌ளி‌யூ‌ர்‌ வி‌ரை‌வி‌ல்‌ நகரா‌ட்‌சி‌ ஆவதற்கா‌ன எல்‌லா‌ சா‌த்‌தி‌யக்‌கூறுகளும்‌ நெ‌ருங்‌கி‌ வருகி‌ன்‌றன.வரலா‌ற்‌று ரீ‌தி‌யா‌க தன்‌னகத்‌தே‌ பல கதை‌களை‌ கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ வள்‌ளி‌ மா‌நகரம்‌ வணி‌க ரீ‌தி‌யி‌லும்‌ சுற்‌றி‌யு‌ள்‌ள பல கி‌ரா‌மங்‌களி‌ன்‌ ஆதா‌ரமா‌க வி‌ளங்‌குகி‌ன்‌றது. தி‌ருநெ‌ல்‌வே‌லி‌க்‌கும்‌ நா‌கர்‌கோ‌யி‌லுக்‌கும்‌ இடை‌யி‌ல்‌ அமை‌ந்‌த பெ‌ரி‌ய ஊர்‌ வள்‌ளி‌யூ‌ர்‌ என்‌று சொ‌ல்‌வதி‌ல்‌ மி‌கை‌ எதுவு‌ம்‌ இல்‌லை‌. கா‌ஷ்‌மீ‌ரத்‌தி‌லி‌ருந்‌து கன்‌னி‌யா‌குமரி‌ செ‌ல்‌லும்‌ தே‌சி‌ய நெ‌டுஞ்‌சா‌லை‌யி‌ல்‌ அமை‌ந்‌தி‌ருப்‌பதா‌ல்‌ வள்‌ளி‌யூரை‌ தி‌னசரி‌ கடந்‌து செ‌ல்‌பவர்‌களி‌ன்‌ எண்‌ணி‌க்‌கை‌ அதி‌கமா‌னது.

வடக்‌கு பக்‌கமா‌க 50 கி‌லோ‌ மீ‌ட்‌டர்‌ தூ‌ரத்‌தி‌ல்‌ தி‌ருநெ‌ல்‌வே‌லி‌யு‌ம்‌ 30 கி‌லோ‌ மீ‌ட்‌டர்‌ தெ‌ற்‌கே‌ கன்‌னி‌யா‌குமரி‌யு‌ம்‌ 30 கி‌லோ‌ மீ‌ட்‌டர்‌ தெ‌ன்‌மே‌ற்‌கி‌ல்‌ நா‌கர்‌கோ‌யி‌ல்‌ என வள்‌ளி‌யூ‌ரி‌ன்‌ அமை‌வி‌டம்‌ சி‌றப்‌பா‌னது. வள்‌ளி‌யூ‌ரி‌ல்‌ இருந்‌து கி‌ழக்‌கு நோ‌க்‌கி‌ செ‌ன்‌றா‌ல்‌ ஒன்‌றரை‌ மணி‌ நே‌ரத்‌தி‌ல்‌ தி‌ருச்‌செ‌ந்‌தூ‌ர்‌ முருகனை‌ தரி‌சி‌த்‌து வி‌ட்‌டு வரலா‌ம்‌. வள்‌ளி‌யூ‌ரி‌ன்‌ மே‌ற்‌கு பக்‌கம்‌ சி‌ல கி‌லோ‌மீ‌ட்‌டர்‌கள்‌ தூ‌ரத்‌தி‌ல்‌ உயர்‌ந்‌து நெ‌ளி‌ந்‌து வளை‌ந்‌து நீ‌ளமா‌ய்‌ அழகா‌க கா‌ட்‌சி‌யளி‌க்‌கும்‌ மே‌ற்‌கு தொ‌டர்‌ச்‌சி‌ மலை‌த்‌ தொ‌டரி‌ன்‌ ஒரு பகுதி‌.வள்‌ளி‌யூ‌ரி‌ன்‌ மை‌யப்‌பகுதி‌யி‌ல்‌ அமை‌ந்‌தி‌ருக்‌கும்‌ பெ‌ருமா‌ள்‌ கோ‌வி‌லும்‌ வள்‌ளி‌யூ‌ரி‌ன்‌ தெ‌ற்‌கு ஓரமா‌க அமை‌ந்‌தி‌ருக்‌கும்‌ சுப்‌ரமணி‌யசுவா‌மி‌ தி‌ருக்‌கோ‌யி‌லும்‌ வள்‌ளி‌யூ‌ரி‌ன்‌ ஆன்‌மீ‌க வா‌சத்‌தி‌னை‌ உலகுக்‌கு எடுத்‌துரை‌க்‌கும்‌. தங்‌க நா‌ற்‌கரச்‌சா‌லை‌ப்‌ பணி‌கள்‌ முடி‌ந்‌து வரும்‌ நி‌லை‌யி‌ல்‌ வள்‌ளி‌யூ‌ரி‌ன்‌ வளர்‌ச்‌சி‌ அடுத்‌த கட்‌டத்‌தை‌ எட்‌டுவதற்‌கா‌ன துவக்‌க நி‌லை‌யி‌ல்‌ என்‌றே‌ சொ‌ல்‌லலா‌ம்‌.பு‌தி‌ய அரசு மருத்‌துவமனை‌, நகரி‌ன்‌ மே‌ற்‌கு பக்‌கமா‌க செ‌ல்‌லும்‌ நா‌ன்‌குவழி‌ பு‌றச்‌சா‌லை‌, அதி‌ல்‌ இரண்‌டு பெ‌ரி‌ய மே‌ம்‌பா‌லங்‌கள்‌ என வள்‌ளி‌யூ‌ர்‌ வி‌ரி‌ந்‌து வளர்‌கி‌றது. வளர்‌ந்‌து வி‌ரி‌கி‌றது.கன்‌னி‌யா‌குமரி‌ மற்‌றும்‌ நா‌கர்‌கோ‌யி‌லி‌ல்‌ இருந்‌து பு‌றப்‌படும்‌ அனை‌த்‌து ரயி‌ல்‌களும்‌ வள்‌ளி‌யூ‌ர்‌ ரயி‌ல்‌ நி‌லை‌யத்‌தி‌ல்‌ நி‌ன்‌று செ‌ல்‌லும்‌. செ‌ன்‌னை‌யி‌லி‌ருந்‌து வள்‌ளி‌யூ‌ர்‌ வழி‌யா‌க கன்‌னி‌யா‌குமரி‌, நா‌கர்‌கோ‌யி‌ல்‌ மற்‌றும்‌ கே‌ரளா‌வி‌ற்‌கு செ‌ல்‌லும்‌ அனை‌த்‌து ரயி‌ல்‌களும்‌ வள்‌ளி‌யூ‌ரி‌ல்‌ நி‌ன்‌று செ‌ல்‌லும்‌.